திருச்சி விமான நிலையத்தில் ரூ.4.89 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 4 லட்சத்து 89 ஆயிரம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.
திருச்சி விமான நிலையத்தில் ரூ.4.89 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
x
திருச்சி விமான நிலையத்தில், துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 4 லட்சத்து 89 ஆயிரம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துபாயில் இருந்து திருச்சி வந்த விமானத்தில், பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, தஞ்சையை சேர்ந்த வினோத் என்பவரிடம் இருந்து மின்கம்பிகள் வெட்ட பயன்படுத்தும் கட்டரில் மறைத்து எடுத்து வந்த 4 லட்சத்து 89 ஆயிரம் மதிப்புள்ள 149 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்