10 ஆயிரம் கோடி ரூபாய் விவசாய கடன் வழங்க இலக்கு - அமைச்சர் செல்லூர் ராஜு

விவசாயிகளுக்கு 10,000 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பணிகள் நடந்து வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்
x
நடப்பாண்டில் விவசாயிகளுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பணிகள் நடந்து வருவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.   சட்டமன்ற கூட்டத்தொடர் விரைவில் தொடங்க  உள்ள நிலையில், துறைவாரியான ஆய்வுக்கூட்டங்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில் கூட்டுறவுத் துறை ஆய்வு கூட்டம் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் சென்னையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடப்பாண்டில் 10 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு வைத்துள்ளதாகக் குறிப்பிட்டார். தனியார் வங்கிகளுக்கு இணையாக, மாநில, மாவட்ட வங்கிகள் வங்கிகள் கணினிமயமாக்கப்பட்டுள்ளதாகவும்,  கூட்டுறவு வங்கிகளில் மக்கள் டெபாசிட் செய்வது 52 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு  உயர்ந்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்