கருணாநிதியின் நினைவிடத்தில் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை..

கருணாநிதியின் 96 வது பிறந்த நாளையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
x
கருணாநிதியின் 96 வது பிறந்த நாளையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கட்சியின் சின்னமான உதய சூரியன் வடிவில், மலர்களால், அலங்கரிக்கப்பட்ட கருணாநிதியின் நினைவிடதிற்கு  சென்ற திமுக தலைவர் ஸ்டாலின், மரியாதை செய்தார். அவரைத் தொடர்ந்து, பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, வி.பி. துரைசாமி, பொன்முடி,  எ.வ. வேலு, ஆ. ராசா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செய்தனர். இதைத் தொடர்ந்து, மெரினாவில், அன்னதான நிகழ்ச்சியை ஸ்டாலின்  துவங்கி வைத்தார். 


Next Story

மேலும் செய்திகள்