விடுதியில் தங்கிய திருநங்கைகளுக்கு பாலியல் தொந்தரவு : தே.மு.தி.க. நிர்வாகி சீனிவாசன் மீது போலீசில் புகார்

மதுரை திருமங்கலத்தில் விடுதியில் தங்கிய திருநங்கைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தேமுதிக நிர்வாகி ஒருவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விடுதியில் தங்கிய திருநங்கைகளுக்கு பாலியல் தொந்தரவு : தே.மு.தி.க. நிர்வாகி சீனிவாசன் மீது போலீசில் புகார்
x
மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்ற திரைப்பட படப்பிடிப்பில் கலந்து கொண்ட 5  திருநங்கைகள் , திருமங்கலம் நகரில் உள்ள தனியார் விடுதியில் தங்கினர். அவர்களுக்கு விடுதி உரிமையாளரும், தேமுதிக நிர்வாகியுமான சீனிவாசன், குடிபோதையில் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட திருநங்கைகள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். சீனிவாசன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் பாதிக்கபட்ட திருநங்கைகள் கோரிக்கை விடுத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்