ஹைட்ரோ கார்பன் கிணறுகளை தோண்ட மத்திய அரசு அனுமதி : ஸ்டாலின் கடும் கண்டனம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை தோண்ட மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஹைட்ரோ கார்பன் கிணறுகளை தோண்ட மத்திய அரசு அனுமதி : ஸ்டாலின் கடும் கண்டனம்
x
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை தோண்ட மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு வேதாந்தா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியிருப்பதற்கு திமுக சார்பில் கண்டனத்தைத் தெரிவித்து கொள்வதாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். வேளாண்மைக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தை உருவாக்கும் இந்த திட்டங்களை எதிர்க்க  தமிழக அரசுக்கு துணிச்சல் இல்லை எனவும் விவசாயிகளை அரசு திட்டமிட்டு வஞ்சித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள போது இது போன்ற திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி கொடுப்பது, தேர்தல் விதிமுறை மீறல் என தெரிவித்துள்ள ஸ்டாலின், மத்தியில் புதிய அரசு அமையும் வரை ஹைட்ரோ கார்பன் அனுமதியையும், அதன் மீதான தொடர் நடவடிக்கைகளையும் பா.ஜ.க. அரசு நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். பிடிவாதமாக இருந்தால், இந்திய தேர்தல் ஆணையமே நேரடியாக தலையிட்டு  அனுமதியை நிறுத்தி வைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்