3 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அளித்த விவகாரம் : உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேருக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
3 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அளித்த விவகாரம் : உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
x
ரத்தினசபாபதி, வி.டி.கலைச்செல்வன், பிரபு ஆகிய 3 எம்எல்ஏக்கள், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் தினகரனுடன் தொடர்பில் உள்ளதாகவும், அவர் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவதாகவும் கடந்த ஆண்டே அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் புகார் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சில புகைப்பட ஆதாரங்களுடன் மூன்று பேர் மீது மீண்டும் கடந்த வெள்ளிக்கிழமை அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் புகார் மனு அளித்திருந்தார். அதனை ஏற்றுக் கொண்ட பேரவைத் தலைவர் தனபால் மூன்று பேரிடமும் விளக்கம் கேட்டு செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில் அதிருப்தி அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேருக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ரத்தினசபாபதி, வி.டி.கலைச்செல்வன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை திங்கட்கிழமை அன்று நடைபெற உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்