தி.மு.க. சார்பில் மே தினப் பேரணி

உழைப்பாளர் தினமான இன்று தி.மு.க. சார்பில் நடைபெற்ற மே தினப்பேரணியில் தி.மு.க. மற்றும் தொ.மு.ச. தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
தி.மு.க. சார்பில் மே தினப் பேரணி
x
மே தினத்தை ஒட்டி தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. சார்பில் மே தினப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அண்ணா நகர் ஐந்தாவது தெருவில் தொடங்கிய இந்த பேரணிக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையேற்றார். அவருடன் அக்கட்சி எம்.பி. கனிமொழி, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, சட்டமன்ற உறுப்பினர் கீதா ஜீவன் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். பேரணியை தொடர்ந்து சிதம்பர நகரில் பிரமாண்ட மே தினப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

"தொழிலாளர்களை பாதுகாக்கும் இயக்கம் திமுக தான்"

தொழிலாளர்களை பாதுகாக்கும் இயக்கமாக திமுக இருந்து வருவதாகவும், உரிமைகளுக்காக போராடும் தொழிலாளர்களை மத்திய, மாநில அரசுகள் அடக்குவதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி சிதம்பரம் நகரில் நடைபெற்ற மே தினப் பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், மே 23ஆம் தேதி தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைகளுக்கு விடிவு காலம் வரும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்