4 தொகுதி இடைத்தேர்தல் - திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் சரவணன் வேட்புமனு தாக்கல்
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சரவணன் , தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்
திருநகரில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் திமுக வேட்பாளர் சரவணன், வேட்புமனு தாக்கல் செய்யும் இடத்திற்கு வந்தார். பின்னர், திருப்பரங்குன்றம் வட்டாச்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் பஞ்சவர்ணத்திடம், தனது வேட்புமனுவை சரவணன் தாக்கல் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சரவணன், திருப்பரங்குன்றத்தில் பல்லாயிரக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என நம்பிக்கை தெரிவித்தார்.
Next Story