வாக்குப்பதிவு இயந்திரங்களை சுமந்து சென்ற குதிரைகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலைகிராமமான வெள்ளகெவிக்கு குதிரைகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.
வாக்குப்பதிவு இயந்திரங்களை சுமந்து சென்ற குதிரைகள்
x
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலைகிராமமான வெள்ளகெவிக்கு குதிரைகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. சுமார் 400-க்கும் மேற்பட்ட வாக்காளர்களை கொண்ட இந்த கிராமத்தில், உரிய சாலை வசதி இல்லை. இதையடுத்து,  கொடைக்கானல் வட்டக்காணல் பகுதியில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள், சுமார் 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு பொதி சுமக்கும் குதிரைகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டன. அப்போது நக்சல் தடுப்பு சிறப்புக் காவலர்கள், வாக்குச் சாவடி அலுவலர்கள் உள்ளிட்டோரும் உடன் சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்