"வேலுமணி விடுத்த சவாலுக்கு ஸ்டாலின் பதில் சொல்லவில்லை " - ஓ.பன்னீர்செல்வம்

நீலகிரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மேட்டுப்பாளையத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.
x
நீலகிரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மேட்டுப்பாளையத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ஏழை எளிய மக்கள் மற்றும்  பெண்களுக்கு அதிமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறினார். உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி மீது திமுக தலைவர் ஸ்டாலின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை  கூறி வருவதாக பன்னீர் செல்வம் தெரிவித்தார். இது தொடர்பாக ஏற்கனவே வழக்கு தொடரப்பட்ட போது அமைச்சர் வேலுமணி விடுத்த சவாலுக்கு ஸ்டாலின் இதுவரை பதில் சொல்லவில்லை என்றும் பன்னீர்செல்வம் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்