10 நகரங்களில் 'செஞ்சுரி' அடித்த வெயில்

தமிழகத்தின் பத்து நகரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹிட் அளவைவிட அதிகமாக வெயில் கொளுத்தியதால், பொதுமக்கள் கடும் அவதியுற்றனர்.
10 நகரங்களில் செஞ்சுரி அடித்த வெயில்
x
தமிழகத்தின் பத்து நகரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹிட் அளவைவிட அதிகமாக வெயில் கொளுத்தியதால், பொதுமக்கள் கடும் அவதியுற்றனர். குறிப்பாக, கரூர் மாவட்டம் பரமத்திவேலூரில், சேலம், திருத்தணி, மதுரை, தருமபுரி, கோவை, நாமக்கல், திருச்சி, பாளையங்கோட்டை ஆகிய நகரங்களில் வெயில் செஞ்சுரியை தாண்டியது. இதனிடையே, அடுத்த 5 தினங்களுக்கு தமிழகத்தின் உள்மாவட்டங்களில், வழக்கத்தைவிட சுமார் 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை உயர  வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்