ஆவணங்கள் இல்லாமல் சிக்கும் ரொக்கம், தங்க நகைகள்...

தேர்தல் பறக்கும் படை சோதனையில் நாடு முழுவதும் 540 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் தங்க நகைகள் உள்ளிட்டப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஆவணங்கள் இல்லாமல் சிக்கும் ரொக்கம், தங்க நகைகள்...
x
தேர்தல் பறக்கும் படை சோதனையில் நாடு முழுவதும் 540  கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் தங்க நகைகள் உள்ளிட்டப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலை ஒட்டி நாடு முழுவதும் தீவிரமாக நடைபெறும் பறக்கும் படை சோதனையில், பறிமுதல் செய்யப்பட்டுள்ள பொருட்களின் மதிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 

அதன்படி மார்ச் 25 ஆம் தேதி வரை ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட 540 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 143 கோடி ரூபாய் ரொக்கம்,  89 கோடி ரூபாய்  மதிப்பிலான மதுபானங்கள், 131 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள், 162 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், 12  கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் என குறிப்பிட்டுள்ளது.

அதிகபட்சமாக ஆந்திராவில் 52 கோடி ரூபாய் ரொக்கம், 30 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகை உள்பட 103 கோடி ரூபாய் மதிப்புக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 107 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 36 கோடி ரூபாய் ரொக்கம், 68 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

உத்தர பிரதேசத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பொருள் மற்றும் பணத்தின் மதிப்பு 104 கோடி ரூபாயாக உள்ளது. இதில் 8 கோடி ரூபாய் ரொக்கம், தங்க நகைகள் 59 கோடி ரூபாய், 22 கோடி ரூபாய் மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தில் 8 கோடி ரூபாய், பஞ்சாபில் 5 கோடி ரூபாய், தெலங்கானாவில் 5 கோடி ரூபாய், கர்நாடகாவில் 6  கோடி ரூபாய்,  மகாராஷ்டிராவில் 6 கோடி ரூபாய் ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பஞ்சாப் மாநிலத்தில் 84 கோடி ரூபாய் மதிப்புக்கு போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. புதுடெல்லி, லட்சத்தீவு உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களில் எந்த தொகையும் கைப்பற்றப்படவில்லை என்று தேர்தல் ஆணையம்  கூறியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்