அப்பள வியாபாரி வீட்டில் 70 சவரன் தங்க நகைகள் கொள்ளை
பதிவு : மார்ச் 14, 2019, 01:24 PM
திருவண்ணாமலை கணேசபுரம் பகுதியில் வசித்து வரும் அப்பள வியாபாரி சேகர் வீட்டில்70 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், இரும்பு லாக்கரை திருடிச் சென்று விட்டதாகவும்,  17 லட்சம் மதிப்பிலான 70 சவரன் தங்க நகைகள்,  வீட்டுப் பத்திரம், வங்கிக் கணக்கு புத்தகங்கள் மற்றும் ஏ.டி.எம் கார்டுகள் இருந்ததாகவும் புகாரில் சேகர் கூறியுள்ளார்.  இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ள போலீசாரிடம், வீட்டில் இருப்பவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளிப்பதால்,  கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளதா? அல்லது நாடகமாடுகிறார்களா? என்று தெரியவில்லை என தெரிவித்ததுடன், அப்பள கம்பெனியில் வேலை பார்ப்பவர்களிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  படுக்கை அறைக்குள் இருக்கும் பீரோவில் 17 சவரண் தங்க நகை மற்றும் 2  லட்சம் ரொக்கம் அப்படியே உள்ள நிலையில், லாக்கரை மட்டும் கொள்ளை அடித்தது எப்படி என பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

4842 views

பிற செய்திகள்

ராமநாதபுரம் அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த லாரி ஓட்டுநர் : ரூ.12.20 லட்சம் நிவாரணம் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

ராமநாதபுரத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த லாரி ஓட்டுநர் குடும்பத்திற்கு 12 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

17 views

"துப்பாக்கிக்கு லைசென்ஸ் வழங்கிட வேண்டும்" - மனித உரிமை ஆணையத்தில் ஸ்ரீரெட்டி புகார்

தமக்கு துப்பாக்கிக்கு லைசென்ஸ் வழங்க கோரி, மனித உரிமை ஆணையத்தில் நடிகை ஸ்ரீரெட்டி மனு அளித்துள்ளார்.

36 views

பேஸ்ட்டாக்கி கடத்திய ரூ.50 லட்சம் தங்கம் : திருச்சி விமான நிலையத்தில் சிக்கியது

இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து திருச்சி வந்த விமானத்தில், வந்திறங்கிய 4 பயணிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவர்கள் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

83 views

நகராட்சி பணி ஆய்வாளரை செருப்பால் அடித்த ஒப்பந்தக்காரர் : நடவடிக்கை எடுக்க கோரி நகராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை தாம்பரத்தில் நகராட்சி பணி ஆய்வாளரை, ஒப்பந்தக்காரர் செருப்பால் அடித்துள்ள் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

31 views

"ஒரே நாடு, ஒரே மொழி என பாஜக செயல்படுகிறது" - வைகோ

தமிழகத்தை அனைத்து துறைகளிலும் மத்திய அரசு வஞ்சித்து வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

27 views

"காந்தி - கோட்சே கொள்கைகளுக்கு இடையிலான போர்" - காங். வேட்பாளர் மாணிக் தாகூர்

வரும் நாடாளுமன்ற தேர்தல் காந்தி மற்றும் கோட்சேவின் கொள்கைகளுக்கு இடையிலான போர் என்று விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூர் தெரிவித்துள்ளார்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.