நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையால் பாலியல் கொடுமைகளுக்கு ஆளான இளம்பெண்

திருமணம் நிச்சயமானதால் பாலியல் ரீதியாக அத்துமீறிய தொழிலதிபரின் மகன், பணத்திற்காக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக பொறியியல் பட்டதாரி பெண் புகார் அளித்துள்ளார். ஆதாரங்களோடு அவர் நடத்தி போராட்டத்தை விவரிக்கிறது, செய்தி தொகுப்பு...
x
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜீவிதா... ஒன்றரை வயதில் தந்தையை இழந்த அவர், தாயார் ஜானகியின் கடின உழைப்பால் பொறியியல் பட்டதாரியாக உயர்ந்துள்ளார்... 

தனது மகளுக்கு நல்ல இடத்தில் திருமணமும் செய்து வைத்துவிட்டால் கடமை நிறைவடைந்துவிடும் என எண்ணிய ஜானகி, ஜீவிதாவிற்கு வரன்பார்க்க ஆரம்பித்துள்ளார்.

அப்போது, தரகர் மூலமாக சென்னிமலை ஈங்கூர் சாலையை சேர்ந்த ஜவுளி கடை தொழிலதிபர் சாமியப்பன் என்பவரது மகன் ரகு அறிமுகமாகி, இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜீவிதாவின் தாயார் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வந்த ரகு, தன் சுயரூபத்தை வெளிக்காட்டியுள்ளார்...

"தனிமையில் இருப்பதை பயன்படுத்தி பலாத்காரம் செய்தார்"

"அழுதேன்... திருமணம் செய்துகொள்வதாக சத்தியம் செய்தார்"

ஆனாலும்  ரகு அத்துமீறியது குறித்து ஜீவிதா வெளியில் யாரிடமும் சொல்லவில்லை... காரணம் ரகு கூறிய அந்த உறுதி வார்த்தைகள்...

"வெளியில் கூற வேண்டாம் என்றார்"

"திருமணம் செய்துகொள்வதாக உறுதி அளித்தார்"

"கர்ப்பமானதை என்னிடம் கூறவில்லை"

"அழுதேன்... ரகுவை நம்புமாறு மகள் கூறினாள்"

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திகொண்ட ரகு, தனது அத்துமீறலை தொடர்ந்துள்ளார்...

"பல முறை பலாத்காரம் செய்தார்"
"திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என மிரட்டினார்"

இந்நிலையில், திடீரென ரகுவிற்கு வேறு ஒரு இடத்தில் அதிக சொத்துடன் வரன் கிடைக்க, வார்த்தைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது... 

"வசதி அதிகமாக இருப்பதால் வேறொரு பெண்ணுடன் நிச்சயம்"

"ரகுவின் பெற்றோர் மிகவும் தரக்குறைவாக பேசினார்கள்"

"ஜீவிதாவின் ஒன்றரை வயதில் என் கணவர் இறந்துவிட்டார்"

"சொத்துக்காக வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய முயற்சி"

ஆண் இல்லாத வீடு என்பதால், அலட்சியமாக ஏமாற்ற முயற்சிக்கிறார் ரகு என வேதனையை வெளிப்படுத்தும் ஜீவிதா, வாட்ஸ் ஆப் உரையாடல்கள், ரகுவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் என பல ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக கூறுகிறார்.

"தந்தை இல்லாத பெண் என்பதால் அலட்சியம்..?"

"ஆதாரங்கள் என்னிடம் உள்ளன"

"நீதிமன்றத்தை மட்டுமே நம்பி உள்ளேன்"

தனி ஒரு பெண்ணாக தன் மகளை பொறியியல் பட்டதாரியாக உயர்த்தி, நல்ல இடத்தில் திருமணமும் செய்து வைத்து அழகு பார்க்க எண்ணிய ஜானகி, இன்று மகளுக்காக நீதிமன்ற வாசல்களில் காத்துக்கிடப்பது சோகத்தின் உச்சம்...

Next Story

மேலும் செய்திகள்