கார் விபத்தில் மரணமடைந்த அதிமுக எம்.பி. : 21 குண்டுகள் முழங்க சொந்த ஊரில் உடல் நல்லடக்கம்

கார் விபத்தில் மரணமடைந்த அதிமுக எம்பி ராஜேந்திரனின் உடல், அவரது சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
கார் விபத்தில் மரணமடைந்த அதிமுக எம்.பி. : 21 குண்டுகள் முழங்க சொந்த ஊரில் உடல் நல்லடக்கம்
x
திண்டிவனத்தில் நடந்த சாலை விபத்தில் அதிமுக எம்பி ராஜேந்திரன் நேற்று உயிரிழந்தார். திண்டிவனம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் நேற்று அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து அவரது உடல் ஆதனப்பட்டு கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில், காவல்துறையினரின் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்