ஸ்டெர்லைட் ஆலை திறப்பு விவகாரம் : தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்காக, வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் தவறான தகவல்களை முன்வைத்துள்ளதாக தமிழக அரசு குற்றம்சாட்டியுள்ளது.
x
பசுமை தீர்ப்பாய உத்தரவின்படி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் 2 முறை எழுதிய கடிதத்தை தமிழக அரசு நிராகரித்துவிட்டது. இதனை தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்தது. இந்த மனு நாளை விசாரணைக்கு வர உள்ளநிலையில், தமிழக அரசு இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளது.  ஸ்டெர்லைட்டை திறப்பதற்காக வேதாந்தா நிறுவனம் தவறான தகவல்களை முன்வைத்துள்ளதாக அதில் குற்றம்சாட்டியுள்ளது. எனவே, வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்