ஸ்டெர்லைட் : உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மனு

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தமிழக அரசு அனுமதியளிக்க உத்தரவிடக்கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.
x
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதியளித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு 
உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை 
விதிக்க மறுத்து விட்டது. 

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தமிழக அரசு அனுமதியளிக்க உத்தரவிடக்கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க அனுமதி அளிக்கவும், ஆலைக்கு மின் இணைப்பு 
உள்ளிட்டவற்றை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது. 


Next Story

மேலும் செய்திகள்