டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக செயல்பட இடைக்கால தடை விதிக்க முடியாது - உயர்நீதிமன்றம்

தமிழக டிஜிபியாக டி.கே.ராஜேந்திரன் செயல்பட இடைக்கால தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
x
தமிழக டிஜிபி டி.கே. ராஜேந்திரன், குட்கா முறைகேடு தொடர்பான ஆவணங்களை திட்டமிட்டு மறைத்து, பதவி நீட்டிப்பு பெற்றுள்ளதாகவும், அவரது பணி நீட்டிப்பை சட்டவிரோதம் என அறிவிக்க கோரியும், கதிரேசன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, எதிர்மனுதாரர்கள் பலருக்கு நோட்டீஸ் சென்றடையவில்லை. அதைத்தொடர்ந்து மீண்டும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டிருந்தது. 

இந்நிலையில் வழக்கு, நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய, மாநில அரசுகள் தரப்பில் இருந்து  பதில் மனுக்கள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. டி.கே.ராஜேந்திரன் டிஜிபியாக செயல்பட இடைக்கால தடை விதிக்க வேண்டுமென மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. அப்போது மனுதாரரின் இடைக்கால கோரிக்கையை நிராகரித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கில் டி.கே.ராஜேந்திரன், மற்றும் தமிழக தலைமை செயலாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்