2-வது மெட்ரோ ரயில் திட்டப் பணி : மாநில அரசு திட்டமாக மாற்றம்

எதிர்பார்த்த அளவு பயணிகள் இல்லாததால், சென்னையில் செயல்படுத்தப்படவுள்ள இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் இருந்து மத்திய அரசு விலகியுள்ளது.
2-வது மெட்ரோ ரயில் திட்டப் பணி : மாநில அரசு திட்டமாக மாற்றம்
x
* சென்னையில் செயல்படுத்தப்பட்ட முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை, மத்திய அரசும், தமிழக அரசும் இணைந்து நிறைவேற்றின. 

* ஆனால், தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கவில்லை. அதனால், அந்த திட்டம் முழுக்க முழுக்க தமிழக அரசின் திட்டமாக மாறியுள்ளது. 

* பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதே, மத்திய அரசு ஒப்புதல் வழங்க மறுத்துள்ளதன் பின்னணி என தெரிகிறது.

* சென்னையில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் வழித்தடத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 2 லட்சம் பேர் பயணிப்பார்கள் என தமிழக அரசு அறிக்கை அளித்திருந்தது.  ஆனால் தற்போது வரை 30 ஆயிரம் பேர் மட்டுமே பயணிக்கின்றனர்.

* இதனிடையே, இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்திற்கான நிதியை தமிழக அரசு கேட்டபோது, வருவாய் நம்பகத்தன்மை குறித்து மத்திய அரசு கேள்வி எழுப்பியது.

* இதையடுத்து, திட்டத்தை தமிழக அரசின் திட்டமாக மாற்ற மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதனைத் தொடர்ந்து ஜப்பான் அரசுடன் தமிழக அரசு நேரடியாக ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. 

* ஒப்பந்தத்தில், மெட்ரோ ரயில் திட்டத்திற்கான அனைத்து மூலப் பொருட்களையும் ஜப்பானில் இருந்தே பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிகிறது. "நிதி சுமையை அரசால் சமாளிக்க முடியும்" - அமைச்சர் எம்.சி.சம்பத் நம்பிக்கை 

2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிக்கு ஏற்படும், நிதி சுமையை தமிழக அரசால் சமாளிக்க முடியும் என தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
"தமிழக அரசு அதிக அக்கறை காட்ட வேண்டும்" -  டி.கே.எஸ். இளங்கோவன்

2ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணி திட்டத்திற்கு, தமிழக அரசு அதிக அக்கறை காட்ட வேண்டும் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் அறிவுறுத்தியுள்ளார்.Next Story

மேலும் செய்திகள்