போர் வெற்றி தினம் : நினைவு சின்னத்தில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அஞ்சலி
போர் வெற்றி தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள போர் நினைவு சின்னத்தில் முதலமைச்சர் நாராயணசாமி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
போர் வெற்றி தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள போர் நினைவு சின்னத்தில் முதலமைச்சர் நாராயணசாமி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போரில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் ஆண்டு தோறும் டிசம்பர் 16ஆம் தேதி நாடு முழுவதும் 'விஜய் திவாஸ்' தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலை போர் நினைவு சின்னத்தில் முதலமைச்சர் நாராயணசாமி அஞ்சலி செலுத்தினர். இதில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ராணுவம், விமானப்படை மற்றும் கப்பல்படை ஆகிய முப்படைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story