கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி : பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் குறைந்து, 74 ரூபாய் 63 காசாக விற்பனையாகிறது.
கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி : பெட்ரோல்,  டீசல் விலை குறைப்பு
x
பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் குறைந்து, 74 ரூபாய் 63 காசாக விற்பனையாகிறது. கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டர் ஒன்று 86 ரூபாய் 10 காசுக்கும், டீசல் 80 ரூபாய் 4-காசுக்கும் விற்பனை ஆனது. அதனைத் தொடர்ந்து பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்தது. இந்நிலையில், சென்னையில், பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு 31 காசுகள் குறைந்து 74 ரூபாய் 63 காசுக்கும், டீசல் விலை 39 காசுகள் குறைந்து, 70 ரூபாய் 38 காசாகவும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்