அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது - விவசாயிகள் வேதனை

திருவாரூர் பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்ததால், விவசாயிகள் வேதனை.
x
திருவாரூர் மாவட்டம் கூடூர், மாங்குடி, ஓவிலிக்குடி உள்ளிட்ட கிராமங்களில் நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தது.  இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அரசு வேளாண் துறையில் அறுவடை இயந்திரத்திற்கு குறித்த நேரத்தில் பணம் செலுத்தியும் அனுப்பாததால், பயிர்கள் சேதமடைந்ததாக விவசாயிகள் குற்றசாட்டியுள்ளனர். இதனால் ஏக்கர் ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்