"கஜா புயல் விவகாரத்தில் தி.மு.க. அரசியல் செய்யவில்லை" - ஸ்டாலின்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு ​100 லாரிகளில் தி.மு.க. சார்பில் நிவாரணப் பொருட்களை திருச்சியில் இருந்து இன்று அனுப்பி வைக்கப்பட்டது.
x
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு ​100 லாரிகளில் தி.மு.க. சார்பில் நிவாரணப் பொருட்களை திருச்சியில் இருந்து இன்று அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சியில் பங்கேற்ற தி.மு.க. தலைவர் ஸ்டாலின், லாரிகளை கொடியசைத்து  அனுப்பிவைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநில அரசு கோரிய பின்னர் தான், புயல் சேதங்களை பார்வையிட மத்திய அரசு மத்தியக் குழுவை அனுப்ப வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினார். கஜா புயல் நிவாரண மற்றும் மீட்புப் பணிகளில் தி.மு.க. அரசியல் செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்