கஜா புயல் மற்றும் கனமழை காரணமாக இதுவரை 45 பேர் உயிரிழப்பு - முதலமைச்சர்

கஜா புயல் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை
கஜா புயல் மற்றும் கனமழை காரணமாக இதுவரை 45 பேர் உயிரிழப்பு - முதலமைச்சர்
x
முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை :

* கஜா புயலால் சேதமடைந்த பகுதிகளை சீர் செய்யும் பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

* கஜா புயல் மற்றும் கனமழை காரணமாக இதுவரை 45 பேர் உயிரிழப்பு.

* புயலின் போது 102 மாடுகள், 633 ஆடுகள் உயிரிழப்பு; மாடு ஒன்றுக்கு ரூ.30,000, ஆடு ஒன்றுக்கு ரூ.3,000 இழப்பீடு.

* கஜா புயல் காரணமாக 56,942 குடிசை வீடுகள் முழுமையாகவும், 30404 குடிசை வீடுகள் பகுதியும், 30328 ஓட்டு வீடுகளும் சேதம்; சேதமடைந்த வீடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்.

* புயல் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளில் ஈடுபட கூடுதலாக 3 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்.

* நாகை - ராதாகிருஷ்ணன், புதுக்கோட்டை - சுனில் பாலிவால், திருவாரூர் - அமுதா ஆகியோர் நியமனம்.

* புயல் காரணமாக நாகை, திருவாரூர், திண்டுக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் 1.70 லட்சம் மரங்கள் சாய்ந்தன.

* புயலால் சேதமடைந்த படகுகளை கணக்கீடு செய்து அறிக்கை அளிக்க மீன்வளத்துறைக்கு உத்தரவு; அறிக்கை அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படும்.

* 372 மருத்துவ முகாம்கள், 1014 நடமாடும் மருத்துவ முகாம்கள் மூலம் இதுவரை 84,436 பேர் பயனடைந்துள்ளனர்.

* புயலால் சேதமடைந்த மின்மாற்றிகள், மின்கம்பங்களை சீரமைக்கும் பணிகளில் 12,532 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 

* புயலால் சேதமடைந்த வாழை, நெல், தென்னை உள்ளிட்ட பயிர்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்கப்படும்.

Next Story

மேலும் செய்திகள்