சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.81.61, டீசல் ரூ.77.34...
தொடர்ந்து உச்சத்தில் இருந்து வந்த பெட்ரோல்-டீசல் விலை கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக இறங்கு முகத்தில் உள்ளது.
கடந்த 18-ஆம் தேதியில் இருந்து பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 18-ம் தேதி சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 85 ரூபாய் 88 பைசாவாகவும், டீசல் 79 ரூபாய் 93 பைசாவாகவும் இருந்தது. இந்நிலையில், அடுத்தடுத்த நாட்களில் விலை தொடர்ந்து சரிந்து வருவதைத் தொடர்ந்து, இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 23 காசுகள் குறைந்து 81 ரூபாய் 61பைசாவாகவும், டீசல் விலை 21 காசுகள் குறைந்து 77 ரூபாய் 34 பைசாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
Next Story