"உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது" - ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில், 6 ஆயிரத்து 851 பேருக்கு இலவச உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளதாக, சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது - ராதாகிருஷ்ணன்
x
நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மாநாடு சென்னையில் இன்று தொடங்கியது. இதில் நடிகர் கமலஹாசன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். துவக்க நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், "உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முன்னணி மாநிலமாக விளங்குகிறது என்றார். 6 ஆயிரத்து 851 பேருக்கு, 501 கோடி ரூபாய் செலவில் இலவச உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்துள்ளதாகவும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்