தந்தி டிவி செய்தி எதிரொலி: தரிசாக மாற இருந்த 2000 ஏக்கர் நிலம் உயிர்பெற்றது
திருச்சியில் பாசனத்திற்கு நீர் இல்லாமல் தரிசாக மாற இருந்த 2000 ஏக்கர் நிலம் தந்தி டிவி செய்தி தாக்கத்தால் உயிர்பெற்றுள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் 2,000 ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, கடந்த 22ஆம் தேதி தந்தி டிவியில் செய்தி ஒளிபரப்பானது.
அதன் எதிரொலியாக, மாவட்ட நிர்வாகம் பொதுப்பணித் துறையினர் சார்பாக வாய்க்கால்களில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தண்ணீரை கண்டு மகிழ்ச்சியடைந்துள்ள விவசாயிகள், விவசாய பணிகளை மும்முரமாக ஆரம்பித்து வருகின்றனர். தண்ணீர் கிடைக்க உதவிய தந்தி டிவிக்கு அப்பகுதி விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
Next Story

