சீமைக்கருவேல மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட ஏரி - தூர் வார விவசாயிகள் கோரிக்கை

சீமைக் கருவேல மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஏரியை தூர்வாருமாறு சேலம் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீமைக்கருவேல மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட ஏரி - தூர் வார விவசாயிகள் கோரிக்கை
x
சேலம் அயோத்தியாபட்டினம் அருகே உள்ள அக்ரஹாரம் நாட்டா மங்கலத்தில் 110 ஏக்கர் பரப்பளவில் சுமார் 30 அடி ஆழத்தில் ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரி சேலத்தை சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஏரியில் சீமைக்கருவேல மரங்கள் மண்டி கிடப்பதால், ஏரி சிதிலமடைந்து காணப்படுகிறது. முறையாக தூர்வாரப்படாததால் ஏரியில் தண்ணீர் இன்றி கிராமங்களில் விவசாயம் பொய்த்து போனதாகவும் கூறப்படுகிறது. எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஏரியை உடனே தூர் வார வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 



Next Story

மேலும் செய்திகள்