குட்கா வழக்கில் கைதான மூவர் ஜாமீன் மனு மீது சிபிஐ பதிலளிக்க உத்தரவு

குட்கா வழக்கில் கைதான மாதவராவ் உள்ளிட்ட 3 பேரின் ஜாமீன் மனு மீது சிபிஐ பதிலளிக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
குட்கா வழக்கில் கைதான மூவர் ஜாமீன் மனு மீது சிபிஐ பதிலளிக்க உத்தரவு
x
குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட குட்கா கிடங்கு உரிமையாளர்கள் மாதவராவ், உமாசங்கர் குப்தா, சீனிவாச ராவ் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், தங்களுக்கு எதிராக சிபிஐ சார்பில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது எனவும் ஆதாரங்கள் இல்லாமல் வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும் கூறியுள்ளனர். மனுவை விசாரித்த சிபிஐ  நீதிமன்ற நீதிபதி திருநீல பிரசாத் அக்டோபர் 3ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு சிபிஐக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்