7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய உள்துறைக்கு ஆளுநர் பரிந்துரை எதுவும் அனுப்பவில்லை - ஆளுநர் மாளிகை

7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ​எந்த பரிந்துரையும் செய்யவில்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய உள்துறைக்கு ஆளுநர் பரிந்துரை எதுவும் அனுப்பவில்லை - ஆளுநர் மாளிகை
x
7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ​எந்த பரிந்துரையும் செய்யவில்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. ஆளுநர் மாளிகை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை  குறித்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

7 பேரின் விடுதலை தொடர்பான தீர்ப்புகள் அடங்கிய நீதிமன்ற ஆவணங்கள் மாநில அரசிடம் இருந்து நேற்று தான் வந்ததாகவும் ஆனால் இதுவரை உள்துறை அமைச்சகத்திற்கு எந்த பரிந்துரையும் செய்யவில்லை எனவும் ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. தேவைப்படும் பொழுது தேவையான ஆலோசனைகள் பெறப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 7 பேர் விடுதலை விவகாரம் நிர்வாக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மிகவும் சிக்கலான விவகாரமாக இருப்பதால் கவனத்துடன் கையாளப்பட்டு வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்