திருவள்ளூர்: விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட மாணவர் மர்ம மரணம்

ரயில்வே பாதுகாப்பு படையினரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட மாணவர் கொடூரமாக இறந்து கிடந்ததை அடுத்து திருவள்ளூர் அருகே போராட்டம் வெடித்துள்ளது.
திருவள்ளூர்: விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட மாணவர் மர்ம மரணம்
x
திருவள்ளூர் மாவட்டம் சின்னக்காவனத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் மெளலீஸ்வரன் நண்பர்களுடன் நேற்று முன்தினம் இரவு ரயில்வே கேட் அருகே பேசிக் கொண்டிருந்துள்ளார். அவரை விசாரணைக்கு ரயில்வே போலீசார் அழைத்து சென்றனர்.

 பின்னர் அவரது பெற்றோரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட ரயில்வே போலிசார்  ,  மெளலீஸ்வரனை அழைத்து போக சொல்லியுள்ளனர். மகனை அழைக்க சென்ற பெற்றோர்,  ரயில் பாதையில் தலை வேறு, உடல் வேறாக மகனின் உடல் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

இதனிடையே பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு மாணவர் உடல் கொண்டு வரப்பட்ட நிலையில், உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்மந்தப்பட்ட ரயில்வே காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்குவதில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்