பக்கிங்காம் கால்வாயில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்...

காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவு, குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பக்கிங்காம் கால்வாயில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்...
x
சோழமண்டலக் கடற்கரைக்கு இணையாக ஓடும் உப்புநீர் கால்வாய் பக்கிங்காம். ஆங்கிலேயர் காலத்தில் நீர்வழி வர்த்தக போக்குவரத்தின் மிக முக்கிய பாதையாக திகழ்ந்த இந்த கால்வாய் தற்போது தூர்ந்து போய் கிடக்கிறது. கல்பாக்கம் நுழைவுவாயில் பாலத்திற்கு அடியே ஓடும் பக்கிங்காம் கால்வாய், குப்பை கூழமாக காட்சி அளிக்கிறது. அதில் இருந்து, துர்நாற்றம் வீசுவதோடு, நோய் பரப்பும் கொசுக்கள் அதிக அளவில் உருவாகுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆங்காங்கே தேங்கி கிடக்கும் குப்பைகளால் மழைநீர் கடலில் கலக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக பக்கிங்காம் கால்வாயை தூர்வாரி, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே கல்பாக்கம் மக்களின் கோரிக்கையாகும். 



Next Story

மேலும் செய்திகள்