வெள்ளத்தில் மிதக்கும் பவானி நகரம்

பவானி மற்றும் காவிரி அறுகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் பவானிநகரில் 450க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
வெள்ளத்தில் மிதக்கும் பவானி நகரம்
x
பவானி மற்றும் காவிரி அறுகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் பவானிநகரில் 450க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. பழைய பேருந்து நிலையம் பகதியில் அமைந்துள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு வெள்ள நீர் புகுந்தது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் மீட்டு 6 முகாம்களில் தங்க வைத்துள்ளனர். இந்த நிலையில்,  ஈரோடு மாவட்ட கண்காணிப்பாளர் உதயசந்திரன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார்.

பவானீஸ்வரர் கோவில் சுவர் இடிந்து விழுந்தது...!
         ஈரோடு மாவட்டம், பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளபெருக்கையடுத்து, சத்தியமங்கல ம் பவானீஸ்வர் கோவில் மதில்சுவர் இடிந்து விழுந்தது.

பவானி சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 60 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் ஆற்றங்கரையில் அமைந்துள்ள பவானீஸ்வரர் கோவிலின் பக்கவாட்டு மதில்சுவர் இடிந்து விழுந்தது. தகவலறிந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, மணல் மூட்டைகளை அடுக்கி மண் அரிப்பை தடுக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், மணல் மூட்டைகளும் அடித்து செல்லப்பட்டதால், அப்பணி கைவிடப்பட்டது.

ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!
         மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ள நீர் கரை புரண்டு ஓடுகிறது.


இதனால் திருப்பூர் நொய்யல் ஆற்றங்கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் பேரில் திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். பொதுமக்கள் யாரும் ஆற்றுப்படுகைக்கு அருகே செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.  

கொள்ளிடம் ஆற்றில் கரை புரண்டோடும் தண்ணீர்: ஆற்றின் கரைகள் உடையும் அபாயம்..!
          சிதம்பரம் அருகே உள்ள கொள்ளிடம் ஆறுகளில் 3வது நாளாக வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதால் ஆற்றின் கரைகள் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கிராம மக்களே சொந்த செலவில் மணல் மூட்டைகளை அடுக்கி தடுப்புகளை அமைத்து வந்தனர். இந்நிலையில் தடுப்பு பணிகளை ஆய்வு செய்த கடலூர் ஆட்சியர் தடுப்பு செலவுத்தொகை அரசு சார்பில் வழங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறி புயல் பாதுகாப்பு மையத்தில் தங்குமாறு அறிவுரை கூறியுள்ளார்.   

மாயனூர் காவிரி ஆற்றில் 2 .22 லட்சம் கன அடி நீர் திறப்பு
          கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு நேற்றிரவு 10 மணி நிலவரப்படி  வினாடிக்கு 2.22 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

அந்த தண்ணீர் அப்படியே ர் முழுமையாக காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதனால், கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீர் படிப்படியாக உயர்ந்து மேலும் அதிகரிக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, மாவட்ட ஆட்சியர் அன்பழகன் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். பொதுப்பணித்துறையினர், காவல்துறையினர் தண்டோரா போட்டும், துண்டு பிரசுரங்கள் விநியோகித்தும், பொதுமக்கள் ஆற்றிற்கு செல்ல வேண்டாம் என எச்சரித்து வருகின்றனர்.  



Next Story

மேலும் செய்திகள்