தந்தி டி.வி செய்தி எதிரொலி : கிராம மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை
தந்தி டி.வி.யில் செய்தி ஒளிபரப்பானதின் எதிரொலியாக, உளுந்தூர்பேட்டை அருகே கிராம மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கிராம மக்களுக்கு சுத்தமான குடிநீர்

அங்குள்ள நாராயணபுரம் கிராம மக்கள் 2 கிலோ மீட்டர் தூரம் சென்று தண்ணீர் எடுத்து வந்தனர். இந்த கிராமத்திற்கு சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எட்டா கனியாகவே இருந்தது. இந்த அவல நிலையையும், நாராயணபுரம் கிராம மக்களின் வேதனையையும் தந்தி டி.வி. நேற்று செய்தியாக ஒளிபரப்பியது. இதனையடுத்து, விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், நாராயணபுரம் கிராமத்திற்கு சென்று இன்று ஆய்வு நடத்தினர். 3 சின்டெக்ஸ் டேங்கின் பழுதை நீக்கி, குழாய்கள் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த நாராயணபுரம் கிராம மக்கள், தந்தி டி.வி.க்கு நன்றி தெரிவித்தனர்.
Next Story