போக்சோ சட்டமும் வழக்குகளும்

சிறுமிகள் மீது பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில் சட்டம் சொல்வது என்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம்..
போக்சோ சட்டமும் வழக்குகளும்
x
சிறார்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க உருவாக்கப்பட்ட சிறப்பு சட்டம் தான் போக்சோ  சட்டம். 

குற்றவியல் ஆவண காப்பக துறையின் தகவலின்படி 2016ஆம் ஆண்டில் மட்டும் 1567 போக்சோ வழக்குகள்  தமிழகத்தில் பதிவாகியுள்ளன. இவற்றில் அதிகபட்சமாக 156 வழக்குகள் சென்னை மாவட்டத்தில் பதிவாகியுள்ளன. 

விழுப்புரம் மாவட்டத்தில் 105 வழக்குகளும், வேலூர் மாவட்டத்தில்
99 வழக்குகளும் பதிவாகியுள்ளன.  இவற்றில் குறைந்த அளவாக கரூர் மாவட்டத்தில் 13 வழக்குகள் பதிவாகியுள்ளன.

கடந்த 2015இல் தமிழகத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் 1544 வழக்குகள் பதிவாகியுள்ளன. சென்னை மகிளா நீதிமன்றத்தில் 77 போக்சோ வழக்குகள்
நிலுவையில் உள்ளன. ஆனால் 180 வழக்குகள் முதல் தகவல் அறிக்கை அளவிலேயே தேங்கியுள்ளன.

செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் 75 போக்சோ வழக்குகள் நிலுவையில் உள்ளன. 53 வழக்குகள் போதுமான ஆவணங்கள் இல்லாததால் காவல் துறைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. 

200 வழக்குகள் முதல் தகவல் அறிக்கை அளவிலேயே தேங்கியுள்ளன. 
சமீப காலமாக போக்சோ சட்டம் பற்றிய விழிப்புணர்வு அதிகரிப்பதால், பதிவாகும் வழக்குகளின்  எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 
Next Story

மேலும் செய்திகள்