உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - இந்திய அணி அபார வெற்றி...
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பேட்டிங் செய்து விளையாடிய இந்திய அணி 50 ஓவர் முடிவில்5 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 337 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்கம் முதலே தடுமாறியது. ஆட்டத்தின் நடுவே மழை குறுக்கிட்டதால் போட்டி 40 ஓவராக குறைக்கப்பட்டது. இறுதியில் இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் உலககோப்பை போட்டியை பொருத்தவரை இந்தியா, பாகிஸ்தானிடம் வீழ்ந்ததில்லை என்ற சாதனை தக்கவைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இந்திய ரசிகர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
Next Story