"மத்திய அரசும், டெல்லி மாநில அரசும் வன்முறையை வேடிக்கை பார்த்தன" - சோனியா காந்தி

டெல்லியில் ஏற்பட்ட வன்முறையை தடுக்க தவறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி நீக்கம் செய்யக் கோரி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் மனு அளித்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
x
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்று மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சோனியா காந்தி, வன்முறையை தடுக்காமல் மத்திய அரசு வேடிக்கை பார்த்ததாக குற்றம் சாட்டினார். குடியரசுத் தலைவர் தமது அதிகாரத்தை பயன்படுத்தி மத்திய அரசை கண்டிக்க வேண்டும் என்றும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் தாங்கள் வலியுறுத்தியதாக சோனியா காந்தி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், டெல்லி வன்முறை நாட்டுக்கே அவமானம் என்றார். விருப்பு, வெறுப்பின்றி அரசு செயல்பட வேண்டும் என்ற தர்மத்தோடு மத்திய அரசு நடக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 


Next Story

மேலும் செய்திகள்