"பாகிஸ்தானுக்கு இந்திய அரசு அழுத்தம் தர வேண்டும்" - சோனியா காந்தி

பாகிஸ்தான் நாட்டில் நங்கனா சாஹிப் என்ற இடத்தில் உள்ள சீக்கியர்களின் புனிதத் தலமான குருத்வாராவில் நடைபெற்ற தாக்குதலுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு இந்திய அரசு அழுத்தம் தர வேண்டும் - சோனியா காந்தி
x
பாகிஸ்தான் நாட்டில் நங்கனா சாஹிப் என்ற இடத்தில் உள்ள சீக்கியர்களின் புனிதத் தலமான குருத்வாராவில் நடைபெற்ற தாக்குதலுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்ய பாகிஸ்தான் நாட்டிற்கு இந்திய அரசு அழுத்தம் தர வேண்டும் என வலியுறுத்தி உள்ள அவர், சீக்கியர்களின் பாதுகாப்பு குறித்தும் கவலை தெரிவித்துள்ளார்.  இந்த விவகாரத்தில் இந்திய அரசு உடனடியாக தலையிட்டு, குருத்வாராவிற்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் சீக்கியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என சோனியா காந்தி வலியுறுத்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்