புதுச்சேரியில் ஆளும்கட்சி சார்பில் 27ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் : ஆதரவு தர நாராயணசாமி வேண்டுகோள்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் ஆளும்கட்சி சார்பில் வரும் 27ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் ஆளும்கட்சி சார்பில் 27ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் :  ஆதரவு தர நாராயணசாமி வேண்டுகோள்
x
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் ஆளும்கட்சி சார்பில் வரும் 27ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய  நாராயணசாமி, இந்த போராட்டத்துக்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். நாடே பற்றி எரியும் நிலையில் மத்திய அரசு இதை அலட்சியம் செய்து வருவதாகவும் நாராயணசாமி குற்றம் சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்