சுஷ்மா மறைவு நாட்டிற்கே பேரிழப்பு : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அனைவரிடமும், பேதமின்றி நல்லிணக்கத்தோடு, பழகும் பண்பாளர் சுஷ்மாவின் மறைவு நாட்டிற்கே பேரிழப்பாகும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சுஷ்மா மறைவு நாட்டிற்கே பேரிழப்பு : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
x
அனைவரிடமும், பேதமின்றி நல்லிணக்கத்தோடு, பழகும் பண்பாளர் சுஷ்மாவின் மறைவு நாட்டிற்கே பேரிழப்பாகும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அரசியல் உலகில் அதிகம் மதிக்கப்பட்ட பெண் தலைவர்களில் ஒருவரான அவர், இளைய தலைமுறையின் நன்மதிப்பை பெற்றதோடு, பெண்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர் என நினைவுகூர்ந்துள்ளார். சுஷ்மாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்வதாக முதலமைச்சர் இரங்கல் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்