கடந்த அமைச்சரவையில் இடம் பெற்றவர்கள் யார்? யார்?...

கடந்த அமைச்சரவையில் பிரதமர் மோடி தவிர்த்து அமைச்சரவையில் 82 பேர் அமைச்சர்களாக பதவி வகித்துள்ளனர்.
x
கடந்த அமைச்சரவையில்  பிரதமர் மோடி தவிர்த்து அமைச்சரவையில் 82 பேர் அமைச்சர்களாக பதவி வகித்துள்ளனர். அவற்றில் முக்கிய துறைகளில் 27 பேர் பொறுப்பு வகித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி அணு சக்தி துறை, விண்வெளி, பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும், அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத பிற துறைகளையும் கவனித்துக் கொண்டார்.

ராஜ்நாத் சிங் - உள்துறை அமைச்சராகவும், சுஷ்மா சுவராஜ் - வெளியுறவுத் துறை பொறுப்புகளையும் கவனித்துக் கொண்டனர். நிதியமைச்சராக இருந்த அருண் ஜேட்லி, அமைச்சரவையின் இறுதி காலத்தில் பொறுப்புகள் இல்லாத அமைச்சராகவும் தொடர்ந்தார். நிதின் கட்கரி - கப்பல், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை , நீர் வழிப் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளை கவனித்துக் கொண்டார்.

பியூஷ் கோயல் - ரயில்வேத்துறை,  நிர்மலா சீதாராமன்- பாதுகாப்புத் துறை பொறுப்புகளை வகித்தனர். சுரேஷ் பிரபு - விமான போக்குவரத்து, சதானந்த கவுடா - புள்ளியியல் மற்றும்  திட்ட அமலாக்கம்,  உமா பாரதி - நீர்வளத்துறை பொறுப்புகளை கவனித்து வந்தனர். ராம் விலாஸ் பஸ்வான் - உணவு மற்றும் நுகர்பொருள் துறையையும், மேனகா காந்தி - மகளிர் மற்றும் குழந்தைகள் நலன் பொறுப்புகளை கவனித்துக் கொண்டனர்.

ஜெகத் பிரஜாஷ் நட்டா - குடும்ப நலம்,  அனந்த குமார் - இரசாயனம் மற்றும் உரத்துறை, ரவி சங்கர் பிரசாத் - சட்டம் மற்றும் தகவல், தொலை தொடர்பு துறை,  ஆனந்து கீதே - கனரக தொழிற்சாலை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் துறை பொறுப்புகளை வகித்தனர். ஹர்சிம்ரத் கவுர் பாதல் - உணவு பதப்படுத்துதல், நரேந்திர சிங் தோமர் - சுரங்கம், ஊரக மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ், செளத்ரி பிரேந்திர சிங் - உருக்கு, ஜூவல் ஓரம் - பழங்குடியினர் நலத்துறை, ராதா மோகன் சிங் - வேளாண்மை துறை
ஸ்மிருதி இரானி - ஜவுளி துறைகளை கவனித்துக் கொண்டனர்.

தவார் சந்த் கெலாட் - சமூக நீதி மற்றும் மேம்பாடு, ஹர்ஷவர்தன் - அறிவியல் தொழில்நுட்பம், பிரகாஷ் ஜவடேகர் - மனிதவள மேம்பாட்டுத்துறை, தர்மேந்திர பிரதான் - பெட்ரோலியம், இயற்கை எரிவாயு துறைகளை கவனித்துக் கொண்டனர். முக்தார் அப்பாஸ் நக்வி - சிறுபான்மையினர் நலத்துறையை கவனித்துக் கொண்டார். கேபினட் அமைச்சரவை மாற்றங்களின்போது, கல்ராஜ் மிஸ்ரா, வெங்கையா நாயுடு ஆகியோர் அமைச்சரவை பொறுப்புகளில் இருந்து விலகினர். விமான போக்குவரத்து துறையை கவனித்துக் கொண்ட அசோக் கஜபதி ராஜு, சிறுபான்மை நலன் துறை அமைச்சராக பொறுப்பேற்ற நஜ்மா ஹெப்துல்லா ஆகியோரும் அமைச்சரவை பதவியில் இருந்து விலகினர்.

Next Story

மேலும் செய்திகள்