ராஜினாமா முடிவில் ராகுல்காந்தி உறுதி : காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல்

காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யும் முடிவில், ராகுல்காந்தி உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராஜினாமா முடிவில் ராகுல்காந்தி உறுதி : காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல்
x
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யும் முடிவில், ராகுல்காந்தி உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று சில மாநில தலைவர்கள், பதவியை விட்டு விலகி உள்ள நிலையில், தம்மை சந்தித்த மூத்த தலைவர்களிடம், கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்குமாறு ராகுல்காந்தி கூறி உள்ளார். தகுதியுள்ள, தமது குடும்பத்தை சேராத, போதிய அனுபவமும், தலைமைக்குரிய தகுதியும் கொண்ட ஒருவரை தேர்ந்தெடுக்கும் படியும், அதற்கான நேரத்தை வழங்க தயாராக இருப்பதாகவும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளதாக, காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Next Story

மேலும் செய்திகள்