"எனது பேச்சை தடை செய்தால் ஊர் முழுக்க பரவும்" - கமல்ஹாசன்

அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் பிரசார கூட்டம் நடைபெற்றது.
x
அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும்  
மக்கள் நீதி மய்யம்  கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் பிரசார கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தமது பேச்சை தடை செய்தால் ஊர் முழுவதும் அது பரவும் என்றார். தனிமனிதராக காந்தி சத்தியாகிரகம் செய்ததை போல் தமது கட்சி தொண்டர்கள் தனிமனித பரப்புரை மேற்கொள்வார்கள் என்று அவர் கூறினார். வேடிக்கை மனிதர்கள் வீழ்ச்சியை பார்க்க தாம் காத்து கொண்டிருப்பதாகவும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்