ராஜேந்திர பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம்

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பத​வியில் இருந்து நீக்க வேணடும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி உள்ளது.
x
அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பத​வியில் இருந்து நீக்க வேணடும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் மாண்பும், தனிமனித கண்ணியமும் துளியுமின்றி, கமல்​ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என்று  ராஜே​ந்திர பாலாஜி சட்டவிரோதமாக பேசியதற்கு  கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் உள்ள ராஜேந்திர பாலாஜி, பதவி பிரமாணத்தின் போது எடுத்த உறுதிமொழியை மீறும் வகையில் நடந்து கொண்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள மக்கள் நீதி மய்யம், அவர் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்