59 மக்களவை தொகுதிகளில் 6-ம் கட்ட வாக்குப்பதிவு...

நாடாளுமன்ற தேர்தலையொட்டி 59 மக்களவை தொகுதிகளில் 6ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
59 மக்களவை தொகுதிகளில் 6-ம் கட்ட வாக்குப்பதிவு...
x
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில் 7 மாநிலங்களில் உள்ள 59 மக்களவை தொகுதிகளில் இன்று 6வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகள், அரியானாவில் 10 தொகுதிகள், பீகாரில் 8 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் 8 தொகுதிகள், டெல்லியில் 7 தொகுதிகள், ஜார்கண்டில் 4 தொகுதிகள் என மொத்தம் 59 தொகுதிகளில் உள்ள வாக்கு சாவடிகளில், இன்று காலை 7 மணியில் இருந்து பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். வாக்குப்பதிவையொட்டி அனைத்து வாக்கு சாவடிகளிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்