அமமுகவில் நாங்கள் உறுப்பினர்கள் கிடையாது - ரத்தினசபாபதி, கலைச்செல்வன்

தாங்கள் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இல்லை என ரத்னசபாபதி மற்றும் கலைச்செல்வன் தெரிவித்துள்ளனர்.
x
சசிகலா, தினகரனுக்கு ஆதரவு அளிப்பது குறித்து விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட நோட்டீஸுக்கு விளக்கம் அளிப்போம் என்றும், தங்களுக்கு சட்ட ரீதியாக பாதுகாப்பு உள்ளது என்றும் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் ரத்னசபாபதி மற்றும் கலைச்செல்வன் தெரிவித்துள்ளனர். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த இருவரும் இவ்வாறு தெரிவித்தனர். தொடர்ந்து, தாங்கள் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இல்லை எனவும், இந்த விவகாரத்தில் எந்த விதமான சமாதான பேச்சுவார்த்தையும் இல்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.  

Next Story

மேலும் செய்திகள்