"தி.மு.க ஆட்சிக்கு வருவதை தடுக்க அ.தி.மு.க சூழ்ச்சி" - ஸ்டாலின்

இடைத்தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க ஆட்சிக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளதால் அதை தடுக்க அ.தி.மு.க சூழ்ச்சி செய்வதாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
x
இடைத்தேர்தலில், வெற்றி பெற்று தி.மு.க ஆட்சிக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளதால், அதை தடுக்க அ.தி.மு.க சூழ்ச்சி செய்வதாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட தென்பரங்குன்றம், கூத்தியார்குண்டு, நேதாஜி நகரில் திண்ணை பிரசாரம் மேற்கொண்ட அவர், தற்போது தி.மு.க கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள் 22 பேர் இருப்பதாகவும், 22 தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்றால், ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைத்துவிடும் என்றார். அதனால் தான் பெரும்பான்மை இல்லாத அதிமுக அரசு, மேலும் 3 அ.தி.மு.க எம்.எல்.ஏக்களின் பதவியை பறிக்க நோட்டீஸ் அனுப்பியிருப்பதாகவும் ஸ்டாலின் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்