பொன்பரப்பி பிரச்சனை உணர்வை தூண்டுகின்ற போராட்டமாக அமைந்துவிடக் கூடாது - தமிழிசை

பொன்பரப்பி பிரச்சனை உணர்வை தூண்டுகின்ற போராட்டமாக அமைந்துவிடக் கூடாது என தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
x
நான்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு பா.ஜ.க.வும், கூட்டணி கட்சிகளும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும் என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகள் அச்சத்தில் இருப்பதால் தான் மின்னணு வாக்கு இயந்திரம் பற்றி தவறான தகவல் பரப்பி வருவதாகவும், அவர்கள் பொய்யின் அடிப்படையில் தேர்தலை சந்திக்கிறார்கள் என்பதை நிரூபித்து கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிவித்தார். 
பொன்பரப்பி பிரச்சனை உணர்வை தூண்டுகின்ற போராட்டமாக அமைந்துவிடக் கூடாது என்றும் போராட்டம், கண்டனம் என்று விரிவுப்படுத்துவது பதற்றத்தை ஏற்படுத்தும் என்பதை தலைவர்கள் உணர வேண்டும் என்றும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்