வரும் தேர்தலுடன் தி.மு.க. எதிர்கட்சி அந்தஸ்தை கூட இழக்க போகிறது - ராமதாஸ்

சென்னையை அடுத்த நங்கநல்லூரில் ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஆதரவு திரட்டிப் பேசினார்.
x
சென்னையை அடுத்த நங்கநல்லூரில் ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஆதரவு திரட்டிப் பேசினார். அப்போது பேசிய ராமதாஸ், வைத்தியலிங்கத்தை பா.ம.க. வேட்பாளராக கருதாமல் அதிமுக வேட்பாளராக நினைத்து அக்கட்சி தொண்டர்கள் பணியாற்றி வருவதாக தெரிவித்தார். தென் சென்னை மக்களவை தொகுதி உறுப்பினராக டி.ஆர்.பாலு இருந்த போது, விமான நிலைய விரிவாக்கத்துக்கு  நிலம் எடுக்க விடாமல் அவர் தடுத்ததாக குற்றம்சாட்டினார். வரும் தேர்தலுடன் தி.மு.க. எதிர்கட்சி அந்தஸ்தை கூட இழக்க போகிறது என்றும் ராமதாஸ் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்