மோடிக்கு "கெட் அவுட்" சொல்ல போகும் நாள் ஏப்.18 - உதயநிதி

ஏப்ரல் 18ஆம் தேதி மோடிக்கு கெட்அவுட் சொல்ல போகும் நாள் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
x
வடசென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி மற்றும் பெரம்பூர் சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர் சேகர் ஆகியோருக்கு ஆதரவாக நடிகர்  உதயநிதி ஸ்டாலின், பெரம்பூர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், பிரதமர்  மோடியின் தயவால் தான் தமிழகத்தில் ஆட்சி நடைபெறுகிறது  என்று விமர்சித்தார். கருப்புப் பணம்  ஒழிப்பு என மக்களை கொன்றது தான் பா.ஜ.க-வின்  சாதனை என்றும் குறிப்பிட்ட உதயநிதி, ஏப்ரல் 18ஆம் தேதி மோடிக்கு கெட்அவுட் சொல்ல போகும் நாள் என தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்